style shiva
Before you speak, Listen Before you write, Think Before you pray, Forgive Before you quit, Try
Saturday, July 6, 2013
Saturday, November 26, 2011
லோஷன்
வணக்கம் நண்பர்களே
நான் சிவா நீண்ட நாட்களுக்கு பிறகு எழுத வந்தேன்
.எதை பத்தி எழுதலாம் ,எதாவது புதிய விடயம் எழுதலாம் என்று நினைத்தேன் .அது சுவாரசியமான விடயமாக இருக்க வேண்டும் என்றுநினைத்தேன்
.அதற்காக நான் எடுத்த தலைப்பு லோஷன்
.எங்க ஊர்ல சினிமா கிடையாது எல்லாமே மீடியாதான்.
இங்கு தமிழ் வானொலி நிலையங்கள் பல உள்ளன ,அதில் சூரியன்,ஷக்தி,வெற்றி,வசந்தம்,தென்றல்,பிறை,ஊவா சமூவானொலி,வெளிச்சம்க போன்ற பண்பலை வானொலி நிலையங்கள் உள்ளன.இவற்றில் பல அறிவிப்பாளர்கள் தொழில் புரிகிறார்கள் .அவர்களில் ஒரு சிலர்தான் ஒளிர்கிரர்கள் அவர்களில் முதன்மையானவர் லோஷன் .லோஷன் பற்றி எழுத காரணம் நான் முதல் முதல் வாசித்த ப்ளாக் லோஷனுடய்த்து. நான் ப்ளாக் எழுத காரணமே அவர்தான் .
லோஷன் ஷக்தி fm il இருக்கும் போது அவர் குரலை கேட்டதில்லை அவர் சூரியன் fm வந்த பிறகுதான் அவர் குரலை கேட்டேன் என்ன ஒரு திறமை என்று வியந்தேன்.அதுவரை என் HERO அபர்ணா சுதன் மட்டுமே.இப்போது லோஷனும் சேர்ந்து விட்டார் .அபர்ணா ஷக்தி போன பிறகுதான் லோஷன் சூரியனுக்கு வந்தார் .வந்த வேகத்தில் அவர் தந்த நிகழ்ச்சிகள் அருமை .விளையாட்டு நிகழ்ச்சி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று செய்துகாட்டியவர் லோஷன் அவர் வியாசர் உடன் அளித்த சூரிய ராகம் பட்டய கிளப்பியது .கொஞ்ச காலம் போன பிறகு வெற்றிக்கு வந்து விட்டார்.அவர் எங்கு சென்றாலும் கலக்குகிறார் .
.லோஷனிடம் எனக்கு பிடித்தவை சில
1.தன்னம்பிக்கை
2.நாத்திகம் பேசுதல்
3.கமல் ரசிகர்
4.சுய பரிசோதனை செய்து கொள்ளல்
5.அவரின் தமிழ்
பிடிக்காத சில விடயங்கள்
1.அறிவுஜீவித்தனம்
2.அவர் இருக்கும் இடத்தில் வேறு யாரும் பிரகாசிக்க விடாமை(ex chandru)
3.போகும் புது இடத்தை புகழ்ந்து பழைய இடத்தை இகழ்வது
4.விஜய் எதிர்ப்பு
5.புதிய நிகழ்ச்சிகளை அறிமுக படுத்தாமல் பழைய மாவை அரைப்பது.
என் மனதில் தோன்றியவை இவை ....
என்றும் அன்புடன்
சிவா
Friday, June 10, 2011
பிடித்தது பிடிக்காதது
பிடித்த நடிகர்கள்
...................................
கமலஹாசன்
ரஜினிகாந்த்
ரவி
சூர்யா
விக்ரம்
விஜய்
பிடிக்காத நடிகர்கள்
...........................................
பிரசாந்த்
ஆர்யா
விஷால்
சிபி
விஜயகாந்த்
பிடித்த நடிகைகள்
......................................
தமன்னா
ஷாலினி
ஜெனிலியா
மீரா ஜாஸ்மின்
ரேஷ்மி மேனன்
ஊர்
............................
பண்டாரவெள,கொழும்பு
பாடல்
..............
சிநேகிதனே சிநேகிதனே
நிறம்
............
நீலம்
சாப்பாடு
....................
இட்டலி சாம்பார்
கடவுள்
.................
விநாயகர்
அறிவிப்பாளர்கள்
...........................................
லோஷன்,அபர்ணா சுதன்
உடை
...........
சேர்ட்
தலைவர்
.....................
பசும்பொன் முத்துராமலிங்கம் அய்யா,நேதாஜி ,
பிடித்த விளையாட்டு
.................................................
கிரிகெட் ,டென்னிஸ்
பிடித்த வீரர்
...........................
சங்ககார,கங்குலி',நடால்,அனா கோர்னிகோவா
பிடித்த அணி
..............................
இலங்கை
தொழில் அதிபர்
...................................
கலாநிதி மாறன்
தொலைக்காட்சி
.....................................
விஜய் டிவி
இன்றைய குறள்
......................................
"அகர முதல வெழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே யுலகு....அன்புடன்
சிவா
Thursday, June 9, 2011
எனக்கு பிடித்த 10 திரைப்படங்கள்
எனக்கு பிடித்த ...
திரைப்படங்கள்
1 .தேவர்மகன்
எனக்கு பிடித்த கமலின் முதல் படம்.என்ன ஒரு கதை ,என்ன ஓர் இயக்கம் சொல்லி கொண்டே போகலாம்.அதுவும் படத்தின் இசை ...இளையராஜா ஒரு ராஜாங்கமே நடத்தி இருப்பார்.ஒரு பேட்டியில் மிஸ்கின் சொல்லுவார் தமிழில் வெளிவந்த படங்களில் ஒரு திரைப்படத்துக்குரிய சகல அம்சங்களும் கையாள பட்டிருப்பது இந்த தேவர் மகனில்தான் என்று சொல்லி இருப்பார்.
.
2 .நாயகன்
கமலின் அடுத்த வரலாற்று படம்.இதுவரை வெளிவந்த உலகத்தின் நூறு சிறந்த படங்களில் ஒன்று.மணிரத்னம் என்ற இயக்குனரின் மணிமகுடம்.
3 .காதல்
என்னை அழ வைத்தமுதல் படம்.அந்த நாட்களில் சந்தியா என் கனவில் அடிக்கடி வந்து போனார்.படம் வந்த நாட்களில் யாராவது வீட்டை விட்டு ஓடி வந்தால் உதவி செய்யணும் என்று நானே மனதில் நினைத்துகொள்வேன்
.
4 .காதலுக்கு மரியாதை
காதலுக்கு மரியாதை தந்த படம்.படத்தி முடிவு அருமை.
5 .காதலன்
நண்பர்களோடு அந்த சின்ன வயதில் திரை அரங்கம் சென்று பார்த்த முதல் படம்.பண்டாரவெள சிகிரி திரை அரங்கில் பாடசாலை உடையோடு பார்த்த படம் பொகட் மணி உதவியில்.
6 .அயன்
சமீபத்தில் வந்த விறு விறுப்பான படம்.எதனை முறை பார்த்தாலும் சலிக்காது.
7 .அலைபாயுதே
என் வாழ்கையின் வசந்த கால படம்.அந்த இளமை பருவ வயதில் எனக்கும் அரும்பு மீசை முளைக்க ஆரம்பித்த நேரம்.இந்த படம் வேறு வந்து எங்களை உசுபேத்தியது.நான் என் நண்பர்கள் அனைவர்க்கும் பிடித்த படம்.அன்று முதல் எங்கள் கனவு கன்னி ஷாலினிதான். இன்றுவரை ...
8 .கில்லி
விறு விறுப்பு என்றால் அது கில்லிதான்.விஜயின் ஆக்சன் சூப்பர்.
9 .கிழக்கு சீமையிலே
தாய் மாமன் உறவை சொல்லிய படம்.அருமையான கிராமத்து கதை.
10 .பாய்ஸ்
என் இருபது வயது ஆரம்பத்தில் வந்த படம்.ஜெனிலியா அறிமுக படம்.
Wednesday, June 8, 2011
tamil
தமிழ்
வணக்கம் என் முதல் பதிவு என்னை பற்றியும் என் ஊரை பற்றியும் சொல்லவந்தேன்
நான் சிவா எனது ஊர் பண்டாரவெள.இலங்கையின் மத்திய மலைநாட்டின் ஒரு அழகிய நகரம். நான் படித்தது பண்டாரவெள தமிழ் மத்திய கல்லூரி.பண்டாரவெள ஊவா மாகாணத்தின் ஒரு முக்கிய நகரம். வர்த்தக தலை நகரமும் கூட இங்கு தமிழர்கள் அதிகம் உள்ளார்கள்..எங்களுக்கு தமிழ் பற்று அதிகம்.எனது பாடசாலைதான் மலையகத்தின் முதன்மை பாடசாலை.எனது கல்லூரி பல கல்விமான்கள்,அரசியல்வாதிகள்,தொழிலதிபர்களை தந்துள்ளது அதேபோல் என்னை போன்ற ஆட்களையும் தந்துள்ளது .
நான் விற்பனை பிரதிநிதியாக தலைநகரில் தொழில் புரிகிறேன் .சமீபத்தில்தான் பதவி உயர்வு கிடைத்தது கடந்த எட்டு வருடங்களாக தலைநகரில் வசித்து வருகிறேன்.இன்று நான் சார்ந்த சமூகம் சார்பாக எழுதலாம் என்று எழுத வந்தேன்.நான் தமிழன்.இந்திய வம்சாவளி தமிழன்.உலக மக்களுக்கு இலங்கையில் தமிழர்கள் எங்கு உள்ளர்கள் என்று கேட்டால் வடக்கு கிழக்கு மட்டும்தான் தெரியும்.எங்கள் ஊரை பற்றி யாருக்கும் தெரியாது.நாங்கள் இருபது லட்சம் மக்கள் மலையக பகுதிகளில் உள்ளோம்.தமிழ் கலாசாரத்தை,தமிழ் பேசி பேணி வருகிறோம்.எங்கள் ஊரை சேர்த்தவர்தான் முரளிதரன்.
இது என் முதல் பதிவு எங்க ஊரில் பிரசித்திபெற்ற விடயங்களை பகிரலாம் எண்டு நினைக்குறேன்
பெரிய நகரங்கள்-பண்டாரவெள,பதுளை,ஹட்டன்,நுவரேலியா,கண்டி,பள்ளகேடுவா,நவலபிடிய
பாடசாலைகள்-பண்டாரவெள தமிழ் மத்திய கல்லூரி ,சரஸ்வதி தேசிய கல்லூரி,ஹிலண்ட்ஸ் கல்லூரி,மடலே ஹிந்து கல்லூரி.சென்ட் தாமஸ் கல்லூரி,
அரசியல் வாதிகள்-s தொண்டைமான்,
விளையாட்டு வீரர்-முரளிதரன்.
அடுத்த பதிவில் santhipom
Subscribe to:
Posts (Atom)

