Saturday, November 26, 2011

லோஷன்


வணக்கம் நண்பர்களே
நான் சிவா நீண்ட நாட்களுக்கு பிறகு எழுத வந்தேன்
 .எதை பத்தி எழுதலாம் ,எதாவது புதிய விடயம் எழுதலாம் என்று  நினைத்தேன் .அது சுவாரசியமான விடயமாக இருக்க வேண்டும் என்றுநினைத்தேன்
.அதற்காக நான் எடுத்த தலைப்பு லோஷன்
.எங்க ஊர்ல சினிமா கிடையாது எல்லாமே மீடியாதான்.
இங்கு தமிழ் வானொலி நிலையங்கள் பல உள்ளன ,அதில் சூரியன்,ஷக்தி,வெற்றி,வசந்தம்,தென்றல்,பிறை,ஊவா சமூவானொலி,வெளிச்சம்க  போன்ற பண்பலை வானொலி நிலையங்கள் உள்ளன.இவற்றில் பல அறிவிப்பாளர்கள் தொழில் புரிகிறார்கள் .அவர்களில் ஒரு சிலர்தான் ஒளிர்கிரர்கள் அவர்களில்  முதன்மையானவர்  லோஷன் .லோஷன்  பற்றி எழுத காரணம் நான் முதல் முதல் வாசித்த ப்ளாக் லோஷனுடய்த்து. நான் ப்ளாக் எழுத காரணமே அவர்தான் .
லோஷன் ஷக்தி fm il இருக்கும் போது அவர் குரலை கேட்டதில்லை  அவர் சூரியன் fm வந்த பிறகுதான் அவர் குரலை கேட்டேன் என்ன ஒரு திறமை என்று  வியந்தேன்.அதுவரை என் HERO அபர்ணா சுதன் மட்டுமே.இப்போது லோஷனும் சேர்ந்து விட்டார் .அபர்ணா ஷக்தி போன பிறகுதான் லோஷன் சூரியனுக்கு வந்தார் .வந்த வேகத்தில் அவர் தந்த நிகழ்ச்சிகள் அருமை .விளையாட்டு நிகழ்ச்சி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று செய்துகாட்டியவர் லோஷன் அவர் வியாசர் உடன் அளித்த சூரிய ராகம் பட்டய கிளப்பியது .கொஞ்ச காலம் போன பிறகு வெற்றிக்கு வந்து விட்டார்.அவர் எங்கு சென்றாலும் கலக்குகிறார் .


.லோஷனிடம் எனக்கு பிடித்தவை சில 
1.தன்னம்பிக்கை
2.நாத்திகம் பேசுதல்
3.கமல் ரசிகர்
4.சுய பரிசோதனை செய்து கொள்ளல்
5.அவரின் தமிழ்



பிடிக்காத சில விடயங்கள்
1.அறிவுஜீவித்தனம்
2.அவர் இருக்கும் இடத்தில் வேறு யாரும் பிரகாசிக்க விடாமை(ex chandru)
3.போகும் புது இடத்தை புகழ்ந்து பழைய இடத்தை இகழ்வது
4.விஜய் எதிர்ப்பு
5.புதிய நிகழ்ச்சிகளை அறிமுக படுத்தாமல் பழைய மாவை அரைப்பது.

என் மனதில் தோன்றியவை  இவை ....
என்றும் அன்புடன்
சிவா